இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வீட்டுத்திட்டம் தொடர்பில் கடும் வாக்குவாதம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்(CWC) பங்களிப்பின் கீழ் தோட்டப்புறங்களில் நிர்மாணிக்கப்படும் வீட்டு திட்டங்களில் பாரிய முறைகேடுகள் இடம்பெறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அண்மைய காலங்களில் முன்வைக்கப்பட்டன.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கே அதிகமாக வீடுகள் வழங்கப்படுவதாகவும் குற்றசாட்டொன்று முன்வைக்கப்பட்டது.
அந்த வகையில் நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பொகவந்தலாவ பிரதேச தோட்டமொன்றில் குறித்த வீட்டு திட்டங்கள் தொடர்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் இவ்வாறு முரண்பாடானது ஏற்பட்டுள்ளது.
குறித்த வீட்டுத்திட்டத்தில் 80 சதவீதம் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும், 10 சதவீதம் மாற்று கட்சிகளுக்கும், ஏனைய 10 சதவீதம் அரச தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு என கூறப்பட்டுள்ளது.
இதன்போது குறுக்கிட்டு எமக்கான வீடுகளை வழங்குமாறு குறித்த பிரதேச இளைஞர்கள் கோரிக்கையை முன்வைத்தபோதே இவ்வாறு முரண்பாடு தோன்றியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri