கட்டாக்காலி கால்நடைகளால் பாரிய பாதிப்பு.. ரவிகரன் எம்.பி கோரிக்கை
கட்டாக்காலி கால்நடைகளால் துணுக்காய் மற்றும் மாந்தைகிழக்குப்பிரதேசத்தில் பொதுமக்கள் மற்றும் அரச திணைக்களங்கள் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த பாதிப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு துணுக்காய் மற்றும் மாந்தைகிழக்கு பிரதேச சபைகள் உடனடியாக கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டங்கள் 17.12.2025நேற்று இடம்பெற்ற நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், துணுக்காய் மற்றும் மாந்தைகிழக்கில் கட்டாக்காலி கால்நடைகள் வீதிகளில் காணப்படுவதால் போக்குவரத்து இடர்பாடுகள் ஏற்படுவதுடன் வீதிவிபத்துக்களும் ஏற்படுவதாகவும் கிராமமட்டஅமைப்புக்களின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri