முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம்: விலைகளில் பெரும் மோசடி
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் நடுப்பகுதியில் மீண்டும் முட்டை விலையை உயர்த்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நாட்களில் சில்லறை விலையில் ஒரு முட்டை 35 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
இருப்பினும், கோழிப்பண்ணைகளில் 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலான விலையில் வாங்கப்படும் முட்டை, சில்லறை வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களால் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டையின் உற்பத்திச்செலவு
ஒரு முட்டையின் உற்பத்திச் செலவு 34 ரூபாயாக உயர்ந்துள்ளதால், முட்டை விற்பனையில் உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாமல் பண்ணை உரிமையாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கோழித் தீவனமாக வழங்கப்படும் ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 80 ரூபாவாக இருந்ததாகவும், தற்போது அரிசி ஆலைகளில் அரிசி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஒரு கிலோ வெள்ளை அரிசி 140 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும்,140 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சோளத்தின் விலையும் 170 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோழி தீவனத்தின் விலை உயர்வு
கோழி தீவனத்தின் விலை உயர்வு மற்றும் முட்டை விலை குறைப்பினால் தங்களின் வருமானம் சரிந்துள்ளதாக சிறு மற்றும் நடுத்தர கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பின்னணியில் பெரிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam