தபால் திணைக்கள ஊழியர்களின் மாபெரும் மோசடி! அம்பலப்படுத்திய தபால் மா அதிபர்
தபால் திணைக்கள ஊழியர்களில் ஒரு தொகுதியினர் தொடர்ந்தும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தபால் மா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹப்புத்தளையில் நடைபெற்ற தபால் திணைக்கள ஊழியர்களின் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே தபால் மா அதிபர் ருவன் சத்குமார மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், களனி தபால்நிலையத்தில் தற்போது உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பணியிடை நீக்கம்
அது நிறைவுற்றதும் அங்கிருக்கும் தபால் அதிபர் உள்ளிட்ட ஏராளம் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படவுள்ளார்கள்.
அதே போன்று தபால் திணைக்களத்தில் ஏராளம் ஊழியர்கள் கைவிரல் அடையாளம் பதியாமல் திருட்டுத்தனமாக மேலதிக நேர வேலைக் கொடுப்பனவாக ஏராளம் தொகையைப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
அதன் மூலம் தபால் திணைக்களம் மாதாந்தம் பாரிய தொகையொன்றை செலவிட நேர்ந்துள்ளது.
மோசடிகள்
மேலும் ஒரு சில ஊழியர்கள் பராமரிப்பு, வாகன சரிபார்ப்பு போன்ற பணிகளை மேலதிக வேலை நேரக் கொடுப்பனவுக்காக திட்டமிட்டே ஞாயிற்றுக் கிழமைகளில் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இவ்வாறாக ஊழியர்களின் மோசடிகள் காரணமாக தபால் திணைக்களம் மாதாந்தம் பெரும் தொகையொன்றை அநியாயமாக செலவிட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
