காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
செம்மணியில் மீட்கப்பட்ட மனித என்பு கூட்டுத்தொகுதிகளை சர்வதேச நிபுணர்கள் மூலம் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தங்களுக்கான நீதி கண்டறியப்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம்(5) கிளிநொச்சியில் நடைபெற்ற குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து கானாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிரா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு நீதி கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தாங்கள் இலங்கையில் கடந்த ஆட்சியாளர்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு இருக்கின்றோம்.
அந்த அடிப்படையிலேயே உள்நாட்டு பொறி முறை ஒன்றை எதிர்த்து சர்வதேச தரத்திலான ஒரு பொறி முறை ஊடாகவே தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றோம்.
அதே நேரம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கபட்ட போராட்டத்திற்கு நமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
