யாழில் வாகன தரிப்பிடத்தை மூடி கொட்டகை அமைத்த வைத்தியர்!
யாழில் வைத்திய கலாநிதி ஒருவர் தனக்கு சொந்தமான கட்டிடத்திற்கு முன்பாக இருக்கக்கூடிய வாகன தரிப்பிடத்தை மூடி சட்டவிரோதமான முறையில் பாரிய நிரந்தர கொட்டகை அமைப்பு ஒன்றை அமைத்து வருவதாக யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் சுவீகரன் நிஷாந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த கட்டிடத்தை தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள வர்த்தகர் ஒருவர் நீண்டகாலமாக வாடகைக்கு எடுத்து புடவை கடையை நடத்தி வந்துள்ளார்.
குறித்த கட்டிடமானது, வேம்படி மத்தியகல்லூரி சந்திக்கு அருகில் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
வாகன தரிப்பிட சிக்கல்
இத தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,
“கட்டிடத்தின் வாகன தரிப்பிடத்தை மூடி பாரிய கொட்டகை அமைத்ததால் வீதியின் இருபக்கத்திலும் பொதுமக்கள் வாகனங்களை ஒழுங்கற்ற முறையில் நிறுத்திவிட்டு செல்வதால் அவ்வீதியால் பயணிக்கும் பேருந்து மற்றும் ஏனைய பொதுமக்களின் வாகனங்கள் செல்ல முடியாமல் காணப்படுகிறது.
இதனால் பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளதோடு தொடர் விபத்துக்களையும் உருவாக்கியுள்ளது.
யாழின் குறித்த பகுதியில் உள்ள பிரபல பாடசாலைகள் இரண்டும் நாளை(10.06.2025) ஆரம்பித்தால் அவ்விடத்தில் பாரிய நெருக்கடி நிலை ஏற்படும்.
மேலும் அமைக்கப்பட்ட கொட்டகைக்கு கொடுக்கப்பட்டுள்ள மின்சாரம் பாதுகாப்பற்ற முறையில் இரும்பு கம்பிகளில் வைத்து வட இணைப்புக்களை கொடுத்துள்ளார்கள்.
இது தொடர்பில், ஏதாவது மின்கசிவு ஏற்பட்டால் அங்கு கூடியிருக்கும் மக்களின் நிலை என்ன?
யாழ். மக்களின் பாதுகாப்பு
யாழ் மாநகரசபை உறுப்பினர் என்ற வகையில் நேற்றையதினம் காலை. 10.00 மணிமுதல் இதை அகற்றுவதற்கு போராடுகின்றேன் ஆட்சி அதிகாரம் எம்மிடம் இல்லாமையால் உடனடி நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை.
இருப்பினும் மாநகர முதல்வர் வி.மதிவதனியிடம் நேற்றைய தினமே அறிவித்திருந்தேன் அதற்கு உடனடியாக அகற்றி தருவதாக கூறியிருந்தார்கள்.
அதன் பின் மராமத்துக்குழுதலைவர் மயூரன் சுகாதாரக்குழு தலைவர் சாரூபன் ஆகியோர் அவ்விடத்திற்கு வருகை தந்திருந்தார்கள் சம்மந்தப்பட்டவர்களிடம் சட்டவிரோதமாக மாநகரசபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கொட்டகையை அகற்றுமாறு கோரியிருந்தோம்.
எனினும் இன்றுவரை அகற்றவில்லை. ஆகவே முதல்வர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக யாழ் மாநகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களை வைத்து இக் கொட்டகையை அகற்றி யாழ். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
