தாஜுதீனின் வாகனத்தைப் பின்தொடர்ந்த வாகனம் - புலனாய்வுப்பிரிவின்ர் வெளியிட்ட தகவல்
றக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் மரணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது காரைப் பின்தொடர்ந்த ஜீப்பில், சந்தேகநபரான 'கஜ்ஜா' என்று அழைக்கப்படும் அருண விதானகமகே பயணித்திருக்கலாம் என்று குற்றப் புலனாய்வுத் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
தாஜுதீனின் கொலை தொடர்பாக, கடந்த 13 ஆண்டுகளாக குற்றப் புலனாய்வுத் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் இக்கொலைக்கு நேரடியாகப் பொறுப்பானவர்களை இன்னும் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மித்தேனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட கஜ்ஜா, தாஜுதீனின் மரணத்திற்கு முன்பு அவரது காரைப் பின்தொடர்ந்த ஜீப்பில் பயணித்ததை அவரது மனைவி புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
சி.சி.டி.வி. காட்சிகள்
சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.டி.வி. காட்சிகள் அவருக்குக் காண்பிக்கப்பட்டபோது அவரது மனைவியால் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து, காட்சிகளில் காணப்பட்ட நபர் கஜ்ஜா என்பதினை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த தடயத்தினை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையிலும் ஏனையவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை 'கஜ்ஜா' என்று அழைக்கப்படும் அருண விதானகமகேவின் மூத்த புதல்வர், அக்காணொளியில் காணப்படுவது தனது தந்தையார் அல்ல என்றும் அது சம்பந்தமாக விசாரணை மீள ஆரம்பிக்குமாறும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
