அம்பாறை மற்றும் கல்முனையில் கடற்தொழிலாளர்களுக்கு கிடைத்த வாய்ப்பு (video)
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பாரிய மீன்கள் பிடிபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை - மருதமுனை, சாய்ந்தமருது மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் நேற்றுமுன் தினம் (03.11.2022) மற்றும் நேற்றைய தினத்தில் (04.11.2022) அதிகளவிலான மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிகளில் 3 வகையான பாரிய பாரை மீன்கள், வளையா மீன்கள், சுறா மீன்கள் என கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
10 முதல் 20 இலட்சம் வரை வருமானம்
இந்நிலையில் பாரை மீன் ஒன்றின் பெறுமதி சுமார் 1500 ரூபா முதல் 1800 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களினால் ஒரு கடற்தொழிலாளியின் ஒரு நாள் வருமானம் 10 முதல் 20 இலட்சமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மருதமுனை கல்முனை கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் கரைவலை கடற்தொழிலாளர்களுக்கு இவ்வாறான பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam