நுவரெலியாவில் பாரிய தீ விபத்து
நுவரெலியா(Nuwara Eliya) நகரில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
நகரின் பிரதான பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று(31) பிற்பகல் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை

இந்த நிலையில், பொலிஸார், நுவரெலியா நகரசபைய தீயணைப்புப் பிரிவு மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த தீப்பரவல் காரணமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வழக்கம் போல உணவகத்தில் சமையல் வேலை செய்து கொண்டிருக்கும் போது சமையலறையில் இருந்து புகை மற்றும் வெப்பத்தை அகற்றும் மின் விசிறியில் ஏற்பட்ட மின் கசிவால் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த தீ விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


மேலதிக தகவல் - திவாகரன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam