பண்டாரவளையில் பாரிய தீ விபத்து - 2 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் நாசம்
பண்டாரவளை நகரில் பிரதான வீதியில் அமைந்துள்ள சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையத்தின் மேல் மாடியில் நேற்று (02) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 20 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று இரவு கடையின் உரிமையாளர்கள் தங்கள் கடைகளை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்ற நிலையில் அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளையில் உள்ள தோட்ட நிறுவனங்களுக்கும், அப்பகுதியில் உள்ள சுற்றுலா விருந்தகங்களுக்கும் பொருட்களை விநியோகிக்கும் இந்த விற்பனை நிலையத்தில், அதிக அளவு உணவுப் பொருட்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டதாகவும் இந்த தீ விபத்தில் அப்பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது..
பண்டாரவளை பொலிசாரும், மாநகர தீயணைப்புப் படையினரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் இந்த தீவிபத்து பாரிய சேதத்தினை ஏற்படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றர்.
தீ விபத்திக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. பண்டாரவளை பொலிசார் இந்த தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
