கொழும்பில் பாரிய தீ விபத்து - ஜனாதிபதி பிறப்பித்துள்ள அவசர உத்தரவு
கொழும்பு – பாலத்துறைபகுதியிலுள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் பரவிய தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முப்படையினர் அதேபோன்று தீயணைப்புப் பிரிவினர் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக சமன் ஏக்கநாயக்க அறிவித்துள்ளார்.
60 வீடுகள் முற்றாக சேதம்
இந்த தீ விபத்தில் சுமார் 60 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் மேலும் பல வீடுகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீப்பரவல் முகத்துவாரம் கஜிமாவத்தை பகுதியில் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டடத்தொகுதியிலேயே இன்றிரவு 7.30 அளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
