பில்லியன் கணக்கான பண மோசடியில் சிக்கிய திலினி பிரியமாலி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்த நிதிக்குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குழும உரிமையாளர் திலினி பிரியமாலியின் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 4 மாதங்களாக நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வத்தளை - அவரிவத்தை எட்வர்ட் பதுமவில் திலினி பிரியமாலி மற்றும் அவரது குடும்பத்தினர் வாடகை அடிப்படையில் வசித்து வந்த வீட்டிலேயே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி குற்றச்சாட்டு

கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியில் திட்ட முதலீட்டிற்காக திலினி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நிலையில்,அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களிடம் இருந்து பல கோடி ரூபாவிற்கும் அதிகமாக நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற துறைப்பாட்டிற்கமைய அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திலினி பிரியமாலி, டுபாயில் ஆரம்பித்துள்ள வியாபாரம் ஒன்று தொடர்பில் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த வியாபார நடவடிக்கை திலினி பிரியமாலி பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam