லெபனானில் ஆயுதக் கிடங்கில் பயங்கர வெடி விபத்து : பலர் பலி
லெபனானில் ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிப்பொருட்களை அகற்றும் பணியில் இராணுவ வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 6 இராணுவ நிபுணர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதில் பலர் காயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குண்டுவெடிப்புக்கான காரணம்
டயர் மாகாணத்தின் தெற்கு கிராமமான ஜிப்கினில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனால் கூடுதல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
HORRIFIC: Six Lebanese Army soldiers were killed south of the Litani River when a Hezbollah weapons depot exploded in the village of Zibqin during the dismantling of munitions that the group had hidden in civilian homes today.
— Hamza (@HowidyHamza) August 9, 2025
Hezbollah’s terrorist cells are enemies of Lebanon.… pic.twitter.com/VXYwhk2HKB
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
ஆயுதக் கிடங்கில் உள்ள வெடிப்பொருட்களை
14 மாதங்களாக இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் மோதல் நடைபெற்று வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக லெபனான் இராணுவம் மற்றும் ஐ.நா. அமைதிப்படை ஹிஸ்புல்லாவின் நிலைகளை கைப்பற்றி வருகிறது.
குறிப்பாக லிடானி ஆற்றுப் பகுதியின் தெற்குப் பகுதியில், ஹிஸ்புல்லா திரும்பிய பகுதியில் பல ஆயுதக் கிடங்குகள் உள்ளன. ஆயுதக் கிடங்கில் உள்ள வெடிப்பொருட்களை லெபனான் ராணுவம் அப்புறப்படுத்தி வருகிறது.
அவ்வாறு தைரே மாகாணத்தில் உள்ள ஜிப்கின் கிராமத்தில் இன்று ஆயுதக் கிடக்கில் உள்ள ஆயுதங்களை அப்புறப்படுத்தியபோது, திடீரென வெடிப்பொருட்கள் வெடித்து சிதறின.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




