பிரித்தானிய குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
பிரித்தானியாவில் இந்த குளிர்காலத்தில் குடும்பங்களுக்கு மின் கட்டணங்களில் அவசரகால தள்ளுபடி வழங்கப்படும் என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
ஏற்கனவே அமைச்சர்களால் அறிவிக்கப்பட்டது போன்று எரிவாயு மற்றும் மின் கட்டணங்களில் 400 பவுண்டுகள் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
மட்டுமின்றி எரிவாயு மற்றும் மின் கட்டணங்கள் இந்த முறை கடும் உச்சத்தை தொடும் என்றே பரவலாக கவலை எழுந்துள்ள நிலையில், தற்போது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒவ்வொரு குடும்பங்களும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு தங்கள் மின் கட்டணங்களில் 400 பவுண்டுகள் தள்ளுபடியைப் பெறுவார்கள். அக்டோபர் மற்றும் நவம்பர் மின் கட்டணத்தில் 66 பவுண்டுகள் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
தொடர்ந்து எஞ்சிய மாதங்களுக்கு 67 பவுண்டுகள் தள்ளுபடி வழங்கப்படும். மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணங்களை எவ்வாறு செலுத்துகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், தள்ளுபடி மாதந்தோறும் கணக்கிடப்படும் என்றே தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, மாணவர்கள் உட்பட வாடகைக்கு குடியிருப்போருக்கும் இந்த சலுகையை வழங்க வீட்டு உரிமையாளர்களுக்கு அமைச்சர்கள் தனிப்பட்ட உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், பிரித்தானியாவில் அனைத்து குடும்பங்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டமானது எளிதாக்கப்பட்டுள்ளது.
இதனால், எவரும் பிரத்யேகமாக மனு அளிக்கவோ கோரிக்கை விடுக்கவோ தேவை இருக்காது என்றே தெரிவித்துள்ளனர். சுமார் 4 மில்லியன் மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இதற்கான தகவல் குறுந்தகவல், மின் அஞ்சல் அல்லது தபால் ஊடாக அறிவிக்கப்பட உள்ளது.
மட்டுமின்றி, இந்த 400 பவுண்டுகள் சலுகையானது கேரவன்களில் வசிப்பவர்களும் பயன்பெறும் வகையில் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam