பியகமவில் பாரிய டீசல் மோசடி - நான்கு பேர் அதிரடியாக கைது
பியகம பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலைச் சேகரித்து விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனல்.
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 19,000 லீற்றருக்கும் அதிக டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனி பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று மாலை பியகம பகுதியில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறை
இதில் 20, 22, 32 மற்றும் 42 வயதுடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வீதிகளில் பயணிக்கும் லொறிகள், டிப்பர் ரக வாகனங்களின் ஓட்டுநர்களுக்குப் பணம் கொடுத்து, முறையான அனுமதி இன்றி அவர்களின் எரிபொருள் தொட்டிகளிலிருந்து டீசலை இவர்கள் உறிஞ்சி எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹெய்யந்துடுவ, திஹகொட மற்றும் நெலும்தெனிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி: ஓய்வூதியக் கணக்குகளில் அவசரத் தேவைக்காகப் பணம் எடுப்பவர்கள் அதிகரிப்பு
ஈரானியர்களுக்கு இன்று காத்திருக்கும் பெரும் ஆபத்து! அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam