இலங்கையில் வெறும் சட்டத்தை மட்டும் நம்பியிருக்காதீர்கள் : சட்டத்தரணி சுகாஷ்
இலங்கையில் எல்லாமே அரச இயந்திரங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் வெறும் சட்டத்தை மட்டும் நம்பியிருக்க வேண்டாம் என சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியாவில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இரண்டாம் இணைப்பு
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரும் ஆர்ப்பாட்டமானது வுனியா - பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக தற்போது ஆரம்பமாகியுள்ளது.
தற்போது இந்த ஆர்பாட்ட பேரணியானது வுனியா - பழைய பேருந்து தரிப்பிடத்திலிருந்து தொல்பொருள் திணைக்களம் வரை நகரவுள்ளது.
இதன்படி ஆர்பாட்டக்களத்தில் பொலிஸாரும், அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த ஆர்பாட்டமானது வவுனியா - பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் இருந்து பாரிய வாகன பேரணியொன்று வவுனியாவை வந்தடைந்துள்ளது.
இதற்கமைய ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள இடத்தில் பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |