காலி முகத்திடலில் குவிந்து கிடக்கும் வாகனங்கள்! அநுரவின் உத்தரவால் ஏற்பட்ட உடனடி மாற்றம்
நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெற்று புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது அடுத்தக்கட்ட நகர்வுகளை முழு நாடும் மற்றும் சர்வதேசமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் ஊழலுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்த அநுர குமார திஸாநாயக்க தான் ஆட்சிக்கு வந்தால் கடந்த அரசாங்கத்தில் ஊழல் செய்த அனைவரையும் கைது செய்வேன் என பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.
அநுரவின் முன்னால் இருந்த சவால்
பிரசாரங்களோடு மாத்திரம் நின்று விடாமல் ஊழல்வாதிகள் குறித்த ஆவணங்களை சேகரித்து அது தொடர்பான கோப்புக்களை ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இந்தநிலையில், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அநுரவுக்கு, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது எத்தனை பெரிய சவாலோ அதேபோன்று ஊழல்வாதிகள் குறித்து அவர் பகிரங்கப்படுத்திய ஆவணங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவர் முன் இருந்த பெரிய சவாலாக காணப்பட்டது.
இந்தநிலையில்தான், தான் பதவியேற்றதும் கடந்த அரசாங்க காலத்தில் அரச வாகனங்களைப் பயன்படுத்திய அமைச்சர்கள் உள்ளடங்களாக அரசியல்வாதிகள் அதனை மீள கையளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார் அநுர.
கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள காலி முகத்திடல் பகுதியில் இந்த வாகனங்களை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்ததை அடுத்து, இந்த இரண்டு நாட்களுக்கு காலி முகத்திடல் பகுதியில் அதிகளவான வாகனங்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளன.
அரசியல்வாதிகள் பயன்படுத்திய இந்த சொகுசு வாகனங்களை பார்க்கும் பொது மக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதோடு புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்களையும் ஆதரவினையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், வாகனங்களோடு அநுரவின் அதிரடி நடவடிக்கைகள் நின்று விடக் கூடாது என்றும் இதனை விட மிகப்பெரிய ஊழல்களை செய்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
