கொழும்பில் நள்ளிரவில் சிக்கிய பல பெண்கள்
கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் தவறான செயற்பாட்டுக்காக இயங்கி வந்த இரண்டு விடுதிகளை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
கல்கிஸ்ஸ பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் பேரில், நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது இரண்டு ஆண்களும் 11 பெண்களும் விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் கைது
கைது செய்யப்பட்ட அனைவரும் 30 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



