டயஸ்போராக்களுக்கு இலங்கையின் சொத்துக்களை வழங்கினால் அடித்து விரட்டுவோம்: மேர்வின் சில்வா சீற்றம்
டயஸ்போராக்களுக்கு நாட்டின் சொத்துக்களை வழங்கினால் சம்பந்தப்பட்டவர்களை விரட்டியடிக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது சிங்கள இராசதானி. இங்கு அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும். அதேபோன்று டயஸ்போராக்களுக்கு இங்குள்ள சொத்துக்களை விற்க வேண்டாம் என்று கோருகின்றேன்.
அவ்வாறு விற்றால் அடுத்த வருடத்தில் நானும் தேர்தலில் போட்டியிடுவேன். அப்போது அதனுடன் தொடர்புடையவர்களை அடித்து விரட்டுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |