இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் மார்ட்டின் சுங்கோங்
நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுங்கோங் இலங்கைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அழைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினதும், பிரதமரினதும் அழைப்பிலே மார்ட்டின் சுங்கோங் இலங்கைக்கு இன்று விஜயம் செய்கின்றார்.
குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மார்ட்டின் சுங்கோங்கை வரவேற்கவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ள மார்ட்டின் சுங்கோங்

மார்ட்டின் சுங்கோங் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர், எதிர்கட்சி தலைவர் ஆகியோரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri