சந்திமாலின் பிறந்த நாள் விருந்திற்கு முன்னர் இரகசியமாக இடம்பெற்ற அமைச்சர் வீட்டு திருமணம்
பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவின் பிறந்த தின விருந்து நடைபெற்ற கொழும்பு சங்ரிலா ஹோட்டலில் இதற்கு இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்னர் முக்கிய பிரமுகர் ஒருவரது புதல்வரின் திருமணம் நடைபெற்றதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
முக்கியமான அமைச்சர் ஒருவரின் புதல்வரது திருமணமே குறைவான அழைப்பாளர்களுடன் இந்த ஹோட்டலில் நடந்துள்ளதாக அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
திருமணம் செய்துக்கொண்ட ஜோடிக்கு சிகையலங்காரம் உட்பட அலங்காரங்களை சந்திமால் ஜயசிங்கவே மேற்கொண்டதாகவும் இதற்காக அவர் பணத்தை அறவிடவில்லை எனவும் கூறப்படுகின்றது.