கனடாவுக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள மார்க் கார்னி
கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய பிரதமர் மார்க் கார்னி இந்த அழைப்பை, தொலைபேசி வாயிலாக விடுத்துள்ளார்.
மோசமான ராஜதந்திர முறுகல்
கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோசமான ராஜதந்திர முறுகல் ஏற்பட்டிருந்த நிலையிலேயே இந்த அழைப்பு செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியா ஜி7 நாடுகளின் உறுப்பினர் அல்ல என்ற போதிலும், 2025 ஜூன் 15 முதல் 17 வரை கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கனனாஸ்கிஸில் நடைபெறும், வருடாந்த கூட்டத்திற்கு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கனடாவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள, இந்திய பிரதமர்மோடி, இந்தியாவும் கனடாவும் புதுப்பிக்கப்பட்ட உறவுடன், பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களால் வழிநடத்தப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இருதரப்பு உறவுகள்
சீக்கிய பிரிவினைவாதத் தலைவரின் கொலையில் இந்தியா தொடர்புப்பட்டுள்ளதாக, கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இருதரப்பு உறவுகள் மோசமடைந்தன.
எனினும் இந்த குற்றச்சாட்டை புதுடில்லி மறுத்ததுடன், கனேடிய இராஜதந்திரிகளையும் வெளியேற்றியது. பதிலுக்கு கனடாவும் இந்திய ராஜதந்திரிகளை வெளியேற்றியது.
இந்தியாவை பொறுத்தவரை, அது, கனடாவின் 10வது பெரிய வர்த்தக பங்காளியாகும் இதன்படி, இந்தியாவுக்கு பருப்பு வகை உள்ளிட்டு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக கனடா விளங்குகிறது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

வெறும் 10 வருடங்களில் முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய 42 வயது நபர் News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
