ரஷ்ய ஆக்கிரமிப்பையும் மீறி இரும்பு தொழிற்சாலையில் இருந்து தப்பிச்சென்ற பொதுமக்கள்! (Video)
ரஷ்ய படைகளின் முழுமை ஆக்கிரமிப்பில் உள்ளபோதும், சுமார் 20 பொதுமக்கள், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்ஸ் இரும்புத் தொழிற்சாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
மரியுபோல் ரஷ்ய படையினர் வசம் வந்துள்ளபோதும் தெற்கு நகரத்தின் இறுதிப் பகுதி இன்னும் உக்ரைனிய துருப்புக்களின் கைகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உக்ரைனி;ய படையினருடன் சுமார் ஆயிரம் பொதுமக்களும் இந்த தொழிற்சாலையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இந்த தொழில்துறை பகுதியை முழுமையாக மூடிவிடுமாறு உத்தரவிட்டிருந்தார்.
எனினும் இதனையும் மீறி 6 சிறுவர்கள் உட்பட்ட 20 பொதுமக்கள் நேற்று தொழிற்சாலையி;ல் இருந்து வெளியேறியுள்ளனர்
அவர்கள் உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தொழிற்சாலைக்குள் சிக்கியுள்ள சுமார் 1,000 பொதுமக்களை விடுவிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.