ஜனாதிபதியை தற்போதும் நம்பும் மன்னார் மக்கள் !காற்றாலை விடயத்தில் மனம் திறந்த மாக்கஸ் அடிகளார்
மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராடும் நிலையில், இந்த விடயம் நாளுக்கு நாள் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தக் காற்றாலைகளை அமைக்கும் பணிக்கு எதிராக மன்னாரில் பொதுமக்கள் மட்டத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஜனாதிபதியே நேரடியாகப் பேச்சு நடத்தி விடயம் குறித்து முடிவெடுப்பதற்கு ஒரு மாத கால அவகாசமும் அவரினால் வழங்கப்பட்டிருந்தது.
அதனைதொடர்ந்து, மன்னார் நகரப் பகுதியில் நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்ட மின் உற்பத்திக்கான 14 காற்றாலைகளையும் திட்டமிட்டபடி அமைக்கும் பணிகளைத் தடை இன்றி தொடரும்படி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், மன்னார் காற்றாலை திட்டம் விடயத்தில் நாங்கள் தற்போதும் ஜனாதிபதியை நம்புகின்றோம் என்று அருட்தந்தை மாக்ஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...



