வவுனியாவை வந்தடைந்த பொத்துவில் முதல் முள்ளிவாய்க்கால் நடை பேரணி (Photos)
புதிய இணைப்பு
இனவிடுதலையை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி வவுனியாவை வந்தடைந்துள்ளது.
பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி ஒன்று கடந்த 15ஆம் திகதி பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகி நேற்றையதினம் திருகோணமலையை வந்தடைந்தது.
அதனை தொடர்ந்து இன்று பிற்பகல் வவுனியாவை அடைந்த குறித்த பேரணி வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்குச் சென்றது. அங்கு வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் பகிரப்பட்டது.
அங்கிருந்து மாங்குளம் ஊடாக நாளையதினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நோக்கிச் செல்லவுள்ளது.
பேரணியில் மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களுக்கு அமைவாக பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்படும் பேரணியானது இன்று திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி எழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.
இனஅழிப்பு வாரத்தினையொட்டி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களுக்கு அமைவாக பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்படும் பேரணியானது நேற்று மாலை திருகோணமலையினை சென்றடைந்திருந்தது.
திருகோணமலை விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட நீதிகோரிய பேரணியானது முல்லைத்தீவு நோக்கி ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
இன்றைய தமிழர்களின் நீதிகோரிய பேரணிக்குத் திருகோணமலையைச் சேர்ந்த சிங்கள மக்களும் ஆதரவு வழங்கியதைக் காணமுடிந்தது.
முல்லைத்தீவு நோக்கி ஆரம்பமாகியுள்ள பேரணிக்குத் திருகோணமலையில் பல்லின மக்களும் ஆதரவு வழங்கி வருவதுடன், முள்ளிவாய்க்கால் இன அழிப்பு துன்பத்தினை நினைவுகூரும் வகையில் கஞ்சிகளையும் வழங்கி வருகின்றனர்.
இன்றைய பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்
தண்டாயுதபாணி உட்படப் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கி கொண்டிருக்கின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு News Lankasri

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri
