புதுக்குடியிருப்பில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பல தாழ்நில கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தாழ்நில கிராமங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் உடையார்கட்டு, ஆனந்தபுரம், சுதந்திரபுரம், விசுவமடு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதுடன் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையில் வீதியின் இருமருங்கிலும் உள்ள வடிகான்கள் காணப்படுகின்றன.
ஆனந்தபுரம் பகுதியில் வெள்ளம் புகுந்து கொண்டதால் 15 வரையான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மழைநீர் வடிந்தோட முடியாத இடங்களில் வடிகால் அமைப்பினை சீர்செய்யும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.

பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
