எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பலர் படகுடன் கைது (Video)
யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு அருகில் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடி தொழில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 43பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், இவ்வாறு சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களுடன், தென்னரசு, லியோன் பீட்டர், கருப்பையா உள்ளிட்ட ஆறு பேருக்கு சொந்தமான 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வந்ததன் பின்னர் காங்கேசன் துறை இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 43 மீனவர்களுக்கு கோவிட் பரிசோதனை செய்து யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் மீனவர்கள்; நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட உள்ளனர். மேலும் மீனவர்கள் பிடித்து படகுகளிலிருந்த மீன்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
ஒரே நாள் நள்ளிரவில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 43 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சென்ற சம்பவத்திற்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் மீனவர் சங்கம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இலங்கை பிரச்சனை காரணமாகப் பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு மாற்றுத் தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்குப் பஞ்சம் பிழைக்கச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் மீன்பிடி தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி நல்ல தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், மீனவர்கள் சிறை பிடிப்பைக் கண்டித்து தமிழக மீனவர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக ராமேஸ்வரம் மீனவ சங்கம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்கள் இலங்கை கடற்படையினர்
சிறைபிடித்துச் சென்றது ராமேஸ்வரம் சுற்றுவட்டார மீனவ கிராம மக்களைச் சோகத்தில்
ஆழ்த்தியுள்ளது.







