திருகோணமலையில் ஒரே நாளில் பறிபோன பல உயிர்கள்! சபையில் அரசாங்கத்திடம் சரமாரிக் கேள்விகள்
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Mahroof) ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
திருகோணமலையில் இன்றைய தினம் இழுவைப்படகு விபத்திற்கு இலக்கான சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் வைத்து கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், குறிஞ்சாக்கேணி பாலம் சம்பந்தமாக கேள்வியொன்றை நான் எழுப்பிய சந்தர்ப்பத்தில் இதுவொரு நக்கலான விடயமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆனால் இன்று பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய அனர்த்தத்திற்கு காரணமான பாதை எந்த அனுமதியுடன் இயங்குகிறது?
இது சட்டப்படி இயங்குகிறதா? சட்டவிரோதமாக இயங்குகிறதா என அரசாங்க தரப்பினை நோக்கி சரமாரியாக கேள்விகளை வினவியுள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam