மட்டக்களப்பில் பல மில்லியன் பெறுமதியான கட்டிடங்கள் பயன்பாடற்ற நிலையில்! முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் கட்டப்பட்ட பெருமளவான பொதுக்கட்டிடங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் பிரதேசத்தில் வெள்ளிமலை கலாசார பண்பாட்டு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. முரளிதரன் கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதியாக போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் கலந்துகொண்டார்.
[
திறப்பு விழா
கடந்த மாகாணசபை ஆட்சிக் காலத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடனும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வெள்ளிமலையின் ஏற்பாட்டிலும் குறித்த ம்ண்டபம் அமைக்கப்பட்டு இதுவரை திறக்கப்படாத நிலையில் இருந்தது.
பல மில்லியன் ரூபாக்கள் செலவிடப்பட்டு அமைக்கப்பட்ட இந்த மண்டபம் திறக்கப்படாதிருந்த நிலையில் ஏழு வருடங்களுக்கு பின்னர் தற்போது திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய ஆட்சியில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த மண்டபம் மக்கள் பாவனைக்காக இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது, இந்த மண்டபம் அமைப்பதற்கு நடவடிக்கையெடுத்த முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை கௌரவிக்கப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |