இலங்கை தமிழர்களுக்கு நீதிகோரி அவுஸ்திரேலியாவில் பல போராட்டங்கள்
இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு எதிராகவும் அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி, மெல்பர்ன் போன்ற நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இலங்கை தனது 73ஆவது சுதந்திர தினத்தை கடந்த 4ஆம் திகதி கொண்டாடிய நிலையில், தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு நடத்தும் அடக்குமுறை பல ஆண்டுகளாக தொடர்வதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
விக்டோரியா மாநிலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிய தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம், இலங்கை அரசை விமர்சனம் செய்துள்ளார்.

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
