நாட்டில் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் பலர் கைது!(Photos)
நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பல குற்றச்செயல்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வீடுகளை உடைத்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டில் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நேற்று (10.11.2022) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 60 தங்கப்பவுண் நகைகள் மற்றும் ஒருதொகை பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலி உறுதி மூலம் காணி மோசடி
யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை நேற்று (10.11.2022) இடம்பெற்றுள்ளது.
அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணியொன்று அதன் உரிமையாளர்களான இறந்துவிட்ட தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்புக் குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார், கடந்த மாதம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடுத்து, சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.
பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேகநபர் கடந்த ஒரு மாதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்தி: தீபன்
திருகோணமலை
திருகோணமலை -மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டிக்கு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து நேற்று (10.11.2022) மாலை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்களை ஏற்றிச் செல்லும் போது கன்னியா பகுதியில் மதுபோதையில் வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் பொல்லால் நோயாளர் காவு வண்டியை தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி:பதுர்தீன் சியானா







16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
