மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ரணிலுடன்..!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதன்படி நேற்று காலை வரை எண்பதுக்கும் மேற்பட்டோர் ரணிலுடன் இருப்பதாக உள்ளக வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கடந்த ஆட்சிக்காலத்தில் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைத்துச் சென்று அரசியல் மாற்றத்திற்கு உட்படுத்தினார்.

இதே நிலையை நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்திலும் சமல் ராஜபக்சவின் மௌனக் கொள்கையே காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அவருக்கும் ஹார்மோன் ஊசி போட்டிருக்க வேண்டும். அவர் சுறுசுறுப்பாக இல்லாமல் இருக்கலாம். ஒரு ஹார்மோன் வேலை செய்ய நேரம் எடுக்குமே…” என்று தெரிவித்த அவர், இதன்படி எதிர்காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் மேடையில் ராஜபக்ச ஒருவர் தோன்றினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri