வன்னியில் 2009ற்கு முன்னுள்ள வாழ்க்கைக்குத் திரும்பும் பல குடும்பங்கள்
வன்னியில் வறுமையில் வாடும் பல குடும்பங்கள் 2009 இற்கு முன்னுள்ள வாழ்க்கை முறைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன.
கிடைக்கும் கொஞ்ச வருமானத்தில் மிச்சம் பிடிக்கும் பணத்தை சமையலறைக்குள் இருக்கும் பேணிகளில் போட்டு வைக்கும் பழக்கம் வீட்டுப் பெண்களிடம் முன்பு இருந்து வந்தது.அந்த இயல்பு மீண்டும் அவர்களிடத்தில் தோன்றுவதை அவதானிக்கலாம்.
பொருட்களை வாங்க கொடுக்கும் பணத்தில் மிஞ்சம் வரும் பணத்தை தேயிலைப் பேணி, பெருச்சீரகப் பேணி போன்ற சமையலறையில் உள்ள பேணிகளில் போட்டு சேர்த்து பின்னர் அந்தப் பணத்தில் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் என குறிப்பிடுகின்றனர்.
பொருளாதார தடை
அம்மாக்களின் சேமிப்பகம் சமையலறை பேணிகள் தான் என இந்த நிகழ்வு தொடர்பில் பலரும் கருத்துரைத்தனர்.
பொருட்களின் விலை உயர்ந்து சொல்லும் இன்றைய சூழலில் கிடைக்கும் பணத்தினைச் சேமித்துப் பயன்படுத்தும் போது குடும்பச் சுமையை சமாளித்துக்கொள்ள முடிவதாகவும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பலரும் குறிப்பிடுகின்றனர்.
விடுதலைப்புலிகளின் காலத்தில் வன்னியின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையின் போதும் இந்த பழக்கம் தமக்கிருந்ததாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |