ஐக்கிய மக்கள் சக்திக்குள் உட்கட்சி மோதல் உக்கிரம்: சஜித் மீது பலரும் அதிருப்தி
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் உட்கட்சி மோதல் உக்கிரமடைய ஆரம்பித்துள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதமர் பதவியை சஜித் பிரேமதாச ஏற்காததால் அதிருப்தியடைந்த ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் கட்சியிலிருந்து விலகி, அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக, எதிர்கால அரசியல் பயணத்தைத் தொடரவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற பதவியில் ஏற்பட்ட சிக்கல்

கரு ஜயசூரியவை தேசியப்பட்டியல் எம்.பியாக்கி, அவருக்குப் பிரதமர் பதவியை வழங்கலாம் என கபீர் ஹாசீம் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.
இதற்காக தனது தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை விட்டுக்கொடுக்க மயந்த திஸாநாயக்க தயாராகவே இருந்துள்ளார். இந்த முயற்சி வெற்றியளிக்காததால் கபீர் ஹாசீம் உள்ளிட்ட தரப்பும் மனமுடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.
சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன போன்றவர்கள் சஜித்தை தவறாக வழிநடத்துகின்றனர் என மேலும் சில உறுப்பினர்கள், தமது சகாக்களிடம் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது,

| வாயால் வடை சுடும் ரணில்:நளிந்த ஜயதிஸ்ஸ |
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam