செவ்வந்தியின் கைதில் தக்சி தொடர்பில் வெளியான பல தகவல்கள்..
கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தியின் கைதின் பின்னர் நந்தகுமாரன் தக்சி என்ற பெண்ணின் பெயரும் பேசுபொருளாகியுள்ளது.
சாவகச்சேரியை சேர்ந்த அவர் அங்குள்ள ஒரு பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றுள்ளதுடன் பாடசாலை கல்வியை இடையிலே இடைநிறுத்தியுள்ளார்.
வேறொரு திருமணம்
அதனை தொடர்ந்து சலீம் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
அவரும் போதை பொருள் போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவராகவுள்ள நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றார்.
அதனை தொடர்ந்து அவருடனான உறவை முறித்துக்கொண்ட தக்சி வேறொரு திருமணம் செய்ததாகவும் கூறப்படுகின்றது.
அவருக்கு ஒரு குழந்தையுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில், அவர் தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவருடன் சேர்ந்து வசிக்க போவதாகவும் சில மாதங்களுக்கு முன்னர் அயலவர்களிடம் கூறி வந்துள்ளார்.



