இலங்கையின் குரங்குகள் மீது ஆர்வம் காட்டும் பல நாடுகள்: மகிந்த அமரவீர
சீனாவைத் தவிர இன்னும் பல நாடுகள், தமக்கு விலங்கியல் பூங்காக்களுக்கு இலங்கையின் டோக் மக்காக் குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அந்த நாடுகளில் உள்ள அந்தந்த தூதரகங்கள் ஊடாக இந்த கோரிக்கையை முன்வைக்குமாறு அரசாங்கம் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று (05.10.2023) தெரிவித்துள்ளார்.

20 பில்லியன் ரூபா இழப்பு
முன்னதாக குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கைகளை விலங்கு உரிமை அமைப்புகளும் ஆர்வலர்கள் சவால் செய்து மனு தாக்கல் செய்திருந்ததால் அவை நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குரங்குகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்கள் போன்ற விலங்குகளால் ஆண்டுக்கு 20 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
குரங்குகளின் ஏற்றுமதிக்கு எதிரான விலங்குகள் உரிமை அமைப்புகளுடன் பயிர் சேதத்தைத் தடுப்பதற்கான அவர்களின் முன்மொழிவுகள் குறித்து விவாதித்ததாக குறிப்பிட்ட அமைச்சர், அவர்கள் சாத்தியமான யோசனைகளை முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam