இலங்கைக்கு அனுசரணையாளர்களாக பல நாடுகள்!
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இணை அனுசரணையாளர்களாக பல நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைச்சாத்திட்டுள்ள நாடுகள்
இந்த தீர்மானத்தில் இப்போது அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஒஸ்திரியா, பெல்ஜியம், கனடா, செக்கியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லட்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மார்ஷல் தீவுகள், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஸ்லோவாக்கியா, ஸ்வீடன், துருக்கி, பிரித்தானியா, மற்றும் வடக்கு அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
இலங்கையில் “நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற தலைப்பிலான வரைவு தீர்மானத்திற்கு ஆரம்பத்தில் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளால் அனுசரணையளிக்கப்பட்டது.
வாக்கெடுப்பு
இந்த வாரம் குறித்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம், பொருளாதார நெருக்கடி
மற்றும் ஊழலின் மனித உரிமைகள் தாக்கம் உட்பட இலங்கையின் மனித உரிமைகளின்
நிலைமையை கண்காணித்து அறிக்கையிடுவதை மேம்படுத்துமாறு மனித உரிமைகளுக்கான
உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை குறித்த வரைவு கோருகின்றது.