இலங்கையில் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
இலங்கையின் பிரதான நகரங்களில் சிலவற்றில் இன்று வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நாட்டில் பல பகுதிகளுக்கு இன்றைய தினம் 150 மில்லிமீற்றர் தாண்டியமழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல நகர் பகுதிகளுக்கு சிறு வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
களு, களனி மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவிக்கின்றது,
கம்பஹா, மினுவங்கொட, ஜா-எல, மில்லனிய, களுத்துறை, ஹொரணை, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளுக்கு சிறு வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 34 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
