வெள்ளத்தில் அழிந்த பல ஏக்கர் கச்சான் செய்கை - நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிப்பு
கிண்ணியா - குருஞ்சக்கேணி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் நூறு ஏக்கருக்கும் (100 Acre) அதிகமான கச்சான் (வேர்க்கடலை) செய்கைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
இதனால், பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் பெரும் வாழ்வாதார இழப்பை சந்தித்துள்ளனர்.
வெள்ள நீரில் மூழ்கிய கச்சான் செய்கை
இதனால் பூஅரசன் தீவு, கல்லடி வெட்டுவான் போன்ற பகுதிகளிலேயே கச்சான் செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அண்மையில் நடந்த வெள்ள அனர்த்தம் காரணமாக, மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பயிரிடப்பட்டிருந்த கச்சான் பயிர்கள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்க சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
அடுத்த போகசெய்கை
பூ அரசன் தீவு , கல்லடி வெட்டுவான் ,வான் எல ,ஆயிலியடி ,மணியரசன் குளம். மஜீத்நகர் தங்கள் உழைப்பையும் முதலீட்டையும் இழந்து நிற்கும் இந்தச் சூழ்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் உரிய அதிகாரிகள் மூலம் உடனடியாகத் தலையிட்டு வெள்ளச் சேதத்திற்கான இழப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அவசர நிவாரணமே, அவர்கள் அடுத்த போகச்செய்கைகளை ஆரம்பிக்கவும், குடும்பத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும் ஒரே வழியாகும் என தெரிவிக்கின்றனர்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
காயத்ரி விஷயத்தில் நிலா எடுத்த அதிரடி முடிவு, கடும் சோகத்தில் சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam