சி.ஐ.டிக்கு செல்ல தயாராகும் மனுஷ நாணயக்கார
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) நாளை(21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க உள்ளதாக அவரது சட்டத்தரணி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பாக தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்கக் கோரி மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு இன்று(20) அழைக்கப்பட்டது.
சி.ஐ.டிக்கு செல்ல தயார்
இதன்போது மனுஷ நாணயக்கார சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்திற்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
மனுஷ நாணயக்கார நாளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் அளிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும், பின்னர் வேறொரு நாளில் இந்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக அழைக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக மனு எதிர்வரும் 22ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |