முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கு பிணை
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்புவதில் நடந்த முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (15) காலை முன்னிலையான போது அவர் கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர் அவர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மூன்றாம் இணைப்பு
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு சற்றுமுன்னர் அழைத்து வரப்பட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று பிற்பகல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் மனுஷ நாணயக்கார முன்னிலையானார்.
இதனையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை (15) காலை முன்னிலையாகியுள்ளார்.
முறையற்ற வகையில் இஸ்ரேலில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தல் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தன்னை கைது செய்ய முன், முன்பிணை மூலம் தன்னை விடுவிக்கக் கோரி மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய கொழும்பு நீதிமன்ற பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று உத்தரவிட்டமைகுறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
