இலங்கையை சுற்றிக்கொண்டிருக்கும் சீனக் கப்பல் தொடர்பில் அரசாங்கம் வேடிக்கை காட்டலாம்: எதிர்க்கட்சி ஆரூடம்
அரசாங்கம் இன்று இலங்கை தேசத்தை, சா்வதேசத்துக்கு முன்னால் கேலிக்குள்ளாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் கயந்த கருணாதிலக்க இன்று இடம்பெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளாா்.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தனியாா் நிறுவனம் ஒன்றுக்காக சீனத் தூதரகம் மக்கள் வங்கியை கறுப்புப்பட்டியலில் சோ்த்துள்ளமை தொடர்பிலேயே இந்தக்கருத்தை அவா் வெளியிட்டுள்ளாா்.
இலங்கையில் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், ஜனாதிபதி செயலணி போன்றவை கடந்த சில வருடங்களாக குரங்குகள் வீடுகளை நிா்மாணிப்பை போன்ற செயல்களாகவே அமைந்துள்ளன. பல குழுக்கள் ஒன்றுகூடவில்லை. சிலவற்றின் அறிக்கைகள் வெளியாகவில்லை.
இந்தநிலையில் 20வது திருத்த மேலதிக அதிகாரங்களைக் கொண்ட, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு மேற்கொள்ளமுடியாத நிலையில், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சொல்வதை செய்யாமல், செய்யமுடியாதவற்றை சொல்லுகின்ற அரசாங்கமே, தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளது என்று கயந்த கருணாதிலக்க தொிவித்துள்ளாா்.
இதேவேளை சீனாவின் உரக்கப்பல் தொடா்ந்தும் இலங்கையை சுற்றிக்கொண்டு இருக்கிறது. சிலவேளைகளில் இலங்கையை சுற்றிச்சுற்றி வருகின்றமையால். அந்த உரத்தில் உள்ள பக்றீரியாக்கள் அழிந்துவிட்டதாக அரசாங்கம் வேடிக்கைக் காட்டக்கூடும்.
எனவே நாடு மற்றும் மக்களுக்காக ஒன்றுபடுமாறு துறைசாா் நிபுணா்களை கேட்டுக்கொள்வதாக கயந்த கருணாதிலக்க அழைப்பு விடுத்துள்ளார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri