மகிந்த ஆட்சியில் நடந்த கொடூரம் - ஜனாதிபதி தேர்தலில் பாரிய மோசடி - நள்ளிரவில் சிறை பிடிக்கப்பட்ட ஆணையாளர்
இலங்கையில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் உண்மையான முடிவு முழுமையாகக் மாற்றப்பட்டுள்ளதாக அரசியல் பிரபலம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
அன்றையதினம் வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்த பிரதான அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஆனந்த ஜயகொடி நேபாளத்தில் இருந்து சிங்கள ஊடகமொன்றிற்கு இந்தத் தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட பிரதான மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவே பெரும்பான்மை வாக்குகளுடன் முன்னிலையில் இருந்தார்.
அதிகாரிகளால் நடவடிக்கை
பொன்சேகா வெற்றி பெறும் நிலையில் உள்ளார் என வாக்கு நிலையில் இருந்த உறுதிப்படுத்தப்பட்டது.

இரவு 12:00 மணியளவில், முழு நாடு தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இதன் போது எந்தவொரு அதிகாரப்பூர்வ காரணமும் இன்றி திடீரென வாக்கு எண்ணிக்கும் செயல்முறை முழுமையாக நிறுத்துவதற்கு அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுதந்திரமாக தேர்தலை நடத்தி வந்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
தேர்தல் முடிவுகள்
அவருக்கு என்ன ஆனது என்பதை எவராலும் கண்டறிய முடியாதவாறு பாதுகாப்புப் பலத்துடன் தனிமைப்படுத்தப்பட்டார்.

அதிகாலை 3.00 மணியின் பின்னர் உத்தியோகபூர்வ தேர்தல் செயலகம் மற்றும் பிரதான நிலையத்திற்கு பதிலாக, தேர்தல் வெளியீட்டு நடவடிக்கை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டது.
அங்கிருந்து சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மாற்றப்பட்ட தேர்தல் முடிவுக் ஆவணங்கள் நாட்டுக்கு வெளியிடப்பட்டது.
மகிந்த ராஜபக்ச தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கை முற்போக்கு முன்னணியில் இருந்து நிறுத்தப்பட்ட ஜனாதிபதி வேட்பாளரை தேர்தல் ஆணையாளர் மூலம் இரத்து செய்தார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri