முல்லைத்தீவில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரித்த நபர் கைது
முல்லைத்தீவு-கேப்பாபிலவு சூரிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி தயாரித்த நபரை பொலிஸ் புலனாய்வாளர்கள் கைதுசெய்துள்ளனர்.
குறித்த கைது சம்பவமானது நேற்று(04.09.23) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சூரிபுரம் பகுதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி தயாரிக்கப்பட்டு வருவதாக கிடைக்கப்பபெற்ற தகவலுக்கமைய அங்கு சென்ற பொலிஸ் புலனாய்வாளர்கள் சட்டவிரோத துப்பாக்கியினை தயாரித்துக்கொண்டிருந்த புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 36 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அவரிடம் இருந்து சட்டவிரோதமாக தயாரிக்கப்பபட்ட துப்பாக்கிகளின் உதிரிபாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri
