கொழும்பில் கடுமையாக அமைக்கப்பட்டுள்ள வீதித்தடைகள்! நேரில் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலை நோக்கி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் முகமாக கொழும்பை சூழவுள்ள சில வீதிகளில் போடப்பட்டிருந்த வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற பொருள் பொருத்தப்பட்டு, அவை கறுப்பு பிளாஸ்டிக்குகளால் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்ததுடன்,அவை தொடர்பிலான புகைப்படங்களும் வெளியாகியிருந்தது.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசனும் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது பாதுகாப்பிற்காக நின்ற படையினரிடம் "நீங்கள் அரசியல் பொலிஸ் இல்லை, மக்கள் பொலிஸ்" என்ற விடயத்தினை ஞாபகப்படுத்தியதாகவும் மனோ கணேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காலிமுக திடல்+ஜனாதிபதி மாளிகை வலயத்தை சுற்றி வீதிகள் நீண்ட முட்கள் கொண்ட இரும்பு வேலிகளால் அடைக்கப்பட்டுள்ளன. கொழும்பு எம்பீக்களாக நானும், முஜிபுரும், சென்று பார்வையிட்டோம். காவலுக்கு நின்ற படையினரிடம் "அரசியல் பொலிஸ் இல்லை, மக்கள் பொலிஸ்" என ஞாபகப்படுத்தினோம். #GoHomeGota pic.twitter.com/S0h6Jz8Cxw
— Mano Ganesan (@ManoGanesan) April 24, 2022
பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள் News Lankasri
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam