பேச்சை நிறுத்தி செயலில் காட்டுங்கள்! ரணிலிடம் மனோ கணேசன் வலியுறுத்து

Sri Lankan Tamils Mano Ganeshan Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Rakesh May 02, 2023 12:39 PM GMT
Report

தமிழ் பேசும் மக்கள் தொடர்பான இனப்பிரச்சினை தொடர்பில் உங்களுடன் முழுமையாக ஒத்துழைக்க நாம் தயார். ஆனால் இனி நீங்கள் பேச்சை நிறுத்தி செயலில் காட்டுங்கள் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு, பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம் என்கிறார் ஜனாதிபதி இதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மே தின உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

பேச்சை நிறுத்தி செயலில் காட்டுங்கள்! ரணிலிடம் மனோ கணேசன் வலியுறுத்து | Mano Ganeshan About Tamils Issue To Ranil

தமிழ் பேசும் மக்கள்

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் தொடர்பான இனப்பிரச்சினை தொடர்பில், உங்களுடன் முழுமையாக ஒத்துழைக்க நாம் தயார். இனி நீங்கள் பேச்சை நிறுத்தி செயலில் காட்டுங்கள். 

ஆனால் நீங்கள் இக்கதையை  கடந்த சுதந்திர தினத்துக்கு முன்னிருந்து சொல்லி வருகின்றீர்கள். பெப்ரவரி நான்காம் திகதியளவில் தீர்வு காண்போம் என்றும் கூறினீர்கள். இப்போதும் மீண்டும், மீண்டும் கூறுகின்றீர்கள்.

பேச்சை நிறுத்தி செயலில் காட்டுங்கள்! ரணிலிடம் மனோ கணேசன் வலியுறுத்து | Mano Ganeshan About Tamils Issue To Ranil

இனப்பிரச்சினைக்கு தீர்வு

இலங்கையில் இன்று இருக்கும் பெரும்பான்மை கட்சிகளின் தலைவர்கள் மத்தியில், தேசிய இனப்பிரச்சசினை தொடர்பில் காத்திரமான முயற்சிகளை எடுத்தவர் ரணில் விக்ரமசிங்க. அதில் சந்தேகம் இல்லை. ஏனையோரை பற்றி சந்தேகங்கள் இருக்கின்றன.

எனினும், ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமனம் பெற்ற பின் பலமுறை இந்தக் கால அட்டவணைக்குள் இனப்பிரச்சினை தீர்வு என பலமுறை கூறிவிட்டார். தமிழ் மக்களுக்கும் இந்த வசனம் பரிச்சயமானதாகும்.

சர்வகட்சி மாநாட்டை நடத்தி முதற்கட்டமாக 13ஐ பற்றி பேசிய போது அதுவரை ஒழிந்திருந்த பௌத்த துறவிகள் தெருவுக்கு வந்தார்கள். அத்துடன் அது நின்று போய் விட்டது.

பேச்சை நிறுத்தி செயலில் காட்டுங்கள்! ரணிலிடம் மனோ கணேசன் வலியுறுத்து | Mano Ganeshan About Tamils Issue To Ranil

நாட்டின் உண்மை நிலைமை

இன்று அரகல போராட்டத்துக்குப் பிறகு, கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு சர்வதேச சமூகத்திடம் கையேந்தும் நிலைமை ஏற்பட்ட பிறகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இனப்பிரச்சினை தீர்வு பற்றி தமிழ்க் கட்சிகளை அழைத்துப் பேச முன் சிங்களக் கட்சிகளை அழைத்து நாட்டின் உண்மை நிலைமை பற்றிப் பேச வேண்டும்.

சிங்கள மக்களை விளித்து நேரடியாகக் கூற வேண்டும். இனிமேலும் இதை தள்ளிப் போட முடியாது என எடுத்துக் கூற வேண்டும். சர்வதேச சமூகமும் அதற்குச் சாதகமாக நடந்துகொள்ளும் என நான் அறிகின்றேன்.

பேச்சை நிறுத்தி செயலில் காட்டுங்கள்! ரணிலிடம் மனோ கணேசன் வலியுறுத்து | Mano Ganeshan About Tamils Issue To Ranil

தொல்பொருள் திணைக்களம்

தற்போது நிலைமையை பாருங்கள். “இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்றெல்லாம் கூறுவதற்கு முன் வடக்கு கிழக்கில் காணி பறிபோகின்றது.

தொல்பொருள் திணைக்களம், தொல்லை திணைக்களம் ஆகி விட்டது. சிவனைத் தூக்கி வீசி விட்டு பௌத்த துறவிகள் இராணுவத் துணையுடன் புத்தரை பிரதிஷ்டை செய்கின்றார்கள்.

பேச்சை நிறுத்தி செயலில் காட்டுங்கள்! ரணிலிடம் மனோ கணேசன் வலியுறுத்து | Mano Ganeshan About Tamils Issue To Ranil

காவி உடையில் அரசியல் செய்யும் பௌத்த துறவிகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதற்கு இதுதான் வேளை. இல்லாவிட்டால் கடும் பதற்ற நிலைமை வடக்கு - கிழக்கில் விரைவில் உருவாகும்.

பெருந்தோட்ட மக்கள்

மலைநாட்டில், வந்தவன், போனவன் எல்லாம் அடாத்தாகத் தோட்டக் காணிகளைப் பிடிக்கிறான்.

ஆனால், 200 வருட வரலாற்றைத் தொட்டு விட்ட பெருந்தோட்ட மக்களுக்கு வாழ, பயிர் செய்ய காணி இல்லை.

பேச்சை நிறுத்தி செயலில் காட்டுங்கள்! ரணிலிடம் மனோ கணேசன் வலியுறுத்து | Mano Ganeshan About Tamils Issue To Ranil

மலையகத் தமிழருக்காக நான் குரல் கொடுத்தால், என்னைத் “தேயிலைக் கொழுந்து பறிக்க வந்தவன்” என்கின்றார்கள். “தோட்டக் காட்டான்” என்கின்றார்கள்.

இது மலைநாட்டுத் பெருந்தோட்ட பகுதிகளில் கடும் பதட்ட நிலைமையை மெதுவாக உருவாக்கி வருகின்றது."என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US