அன்று சிங்களம் மட்டும் இன்று ஆங்கிலம் மட்டுமா - நீதி அமைச்சரிடம் மனோ கணேசன் கேள்வி
1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்ததைப் போன்று, இன்று ஆங்கிலம் மட்டும் சட்டம் கொண்டு வருகின்றீர்களா? அதென்ன எதையெடுத்தாலும் "மட்டும்" என்கிறீர்கள்?" என இன்று நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டக்கல்லூரி பரீட்சை ஆங்கிலத்தில் மட்டும் எழுதப்படுவது என்ற புதிய விதி பற்றிய சர்ச்சை நாடாளுமன்றத்தில் எழுந்த போது அதில் தலையிட்டு மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது,
"இலங்கையில் தமிழ், சிங்களம் இரண்டும் தேசிய மற்றும் ஆட்சி மொழிகள். ஆங்கிலம் இணைப்பு மொழியாகும். இந்த மூன்றில் விரும்பிய ஒரு மொழியில் பரீட்சை எழுத சட்டக்கல்லூரி மாணவர் அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆங்கிலம் அவசியம்தான். ஆனால், ஆங்கிலம் மட்டும் என்றால் அது கொழும்பில் உள்ள ஒரு வகுப்புக்கு மட்டுமே உதவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
May you like this Video
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri