அமைச்சர் ஜீவனின் உரை குறித்து மனோ கணேசன் கடும் அதிருப்தி
அமைச்சர் ஜீவன் தொண்டமான் அண்மையில் ஆற்றிய உரையொன்று குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மலையக இளம் அரசியல்வாதி ஒருவர் மேடையில் பேசிய காணொளியை பார்த்து அதிர்ந்து போனதாகவும், வெட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஜீவன் அண்மையில் ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை குறித்து ஆவேசமாக உரையாற்றிய காணொளியொன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இதில் அவர் பெண்களை, தாயை இழிவுபடுத்தும் வகையில் மலையகத்தின் இளம் அரசியல்வாதி பேசியுள்ளமை வருத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.