மன்னாரில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் தொடங்கி வைப்பு
மன்னார் - முசலி பிரதேசத்தில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமமானது இராஜாங்க அமைச்சர் கே.கே. மஸ்தானினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, இன்று (13.07.2024) காலை முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலைக்குளி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனை மற்றும் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கருத்திட்டத்திற்கு அமைவாக இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
பொருட்கள் வழங்கல்
குறித்த நிகழ்வில், தொழில் முனைவோருக்கான விவசாய உபகரணங்கள், கால்நடை வளர்ப்புக்கான பொருட்கள் மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, விவசாய திணைக்கள அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், கிராம சேவையாளர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
