நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த சொகுசு கார் விபத்து
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த சொகுசு கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இ்ந்த விபத்தில் படுகாயமடைந்தவர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மத்துகமவில் இன்று (13) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற போது தெற்கு அதிவேக வீதியின் 82/1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணை
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் மற்றொரு வாகனத்தில் சென்று கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்து இடம்பெற்றபோது காரில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இரண்டு பாதுகாவலர்கள் உட்பட ஐந்து பேர் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
